2025 மே 19, திங்கட்கிழமை

படையினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளன

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள வலி.வடக்கு பிரதேசசபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் அவற்றையும் விடுவிப்பதனூடாகவே மீள்குடியேற்றம் முழுமைப்படுத்தப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

வலி.வடக்கு பிரதேசத்தின் தையிட்டி தெற்கு, தையிட்டி வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 19 ஏக்கர் காணிகள் நேற்று (22) விடுவிக்கப்பட்டுள்ளது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கில் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய தையிட்டி தெற்கு தையிட்டி வடக்கு பிரதேசங்களிலிருந்து ஒரு தொகுதி காணிகள் 29 வருடங்களின் பின்னர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பது பொது மக்களுக்கு மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வலிகாமம் வடக்கில் இன்னமும் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அவ்வாறு படையினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட்டாலே மீள்குடியேற்றம் முழுமைப்படுத்த முடியும். ஆகவே படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X