2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பண்ணைப் பாலத்திலிருந்து மரங்களை நாட்ட வேண்டும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணப் பண்ணைப் பாலத்திலிருந்து தீவுக்கான இருபது கிலோமீற்றர் வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டுமாறு தீவக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த வீதியில் இரு மருங்கிலும் மரங்கள் இல்லாத நிலையில் வீதி காணப்படுவதாகவும் மருதமரம், புளியமரக் கன்றுகளை நாட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிராம மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் இம்மர நடுகை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தில் அதன் சூழலுக்கேற்ற விதத்தில் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் கூடுதலாக நடுகை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X