2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பணிப்புறக்கணிப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, வைத்தியசாலை பணியாளர்கள், இன்று வெள்ளிக்கிழமை (21) ஒரு மணிநேர  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வைத்தியர்கள், தாதிய அலுவலர்கள், நிர்வாகப் பிரிவினர், தொழில்நுட்பப் பிரிவினர் மருந்தாளர்கள் உட்பட அனைவரும் இப்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வியாழக்கிழமை (20) மாலை கடமை முடிந்து வீடு திரும்ப முற்பட்ட பெண் பரிசாரகரின் (அட்டன்ட்) மோட்டார் சைக்கிள் பழுதானதால், வாசலில் நின்ற பாதுகாப்பு அலுவலருடன் அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளைக் கொண்டுச் சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு வெளியில் மதுபோதையில் நின்றிருந்த நால்வர், பாதுகாப்பு அலுவலரையும், பரிசாரகரையும் தாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து அந்த இடத்துக்கு வந்த வைத்தியசாலை மேற்பார்வையாளர் மற்றும் வைத்தியசாலை பொலிஸார் ஆகியோர் மீதும், போதையில் நின்றவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அலுவலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே வைத்தியசாலை ஊழியர்கள், இன்று வெள்ளிக்கிழமை காலை  வைத்தியசாலை கதவுகளை மூடி 1 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X