2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பணத்தை திருடிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய காரியாலயத்தின் சேவைகால உள்ளக பயிற்சி அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகரை,  எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்ற குறித்த பிரதம பொலிஸ் பரிசோதகர், வாடிக்கையாளர் ஒருவர் கீழே விழுத்திய  பணப்பையை தனது காலால் மறைத்து திருடியுள்ளார்.

இது தொடர்பில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்தவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, வங்கியில் பொருத்தியிருந்த சீ.சீ.ரி கமராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் ஊடாக குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X