Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
உடுவில் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான பணத்தை, தேவாலயம் கட்டவும், மதத் தேவைகளுக்கவும் பேராயர் கேட்டார் என்பதனை எவரனும் நிரூபிப்பார்கள் ஆயின் நான் எனது பேராயார் பதவியைத் துறப்பேன் என பேராயரும், கல்லூரியின் தலைவருமான பேரருட் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.
வட்டுக்கோட்டையிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் பேராயர் இல்லத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
'உடுவில் மகளிர் கல்லூரி நிதியை கையாளுவது, அதிபருடையது பொருளாளரின் பொறுப்பு. பேராயருக்கும் நிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தேவாலயம் ஒன்று கட்டுவதற்காக உடுவில் மகளிர் கல்லூரியின் பணத்தை நான் கோரியதாகவும், அதற்கு சிரானி மில்ஸ் மறுப்புத் தெரிவித்தமையால், அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியை நிரூபித்தால் நான் எனது பேராயர் பதவியை துறப்பேன்' என்றார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago