2025 மே 15, வியாழக்கிழமை

‘பணியாளர்களின் விடுமுறை இரத்து’

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

யாழ் குடாநாட்டில், டெங்கு பரவும் அபாயம் உள்ளதையடுத்து, கழிவகற்றும் பொறிமுறையை துரிதமாக மேற்கொள்ளும் வகையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கழிவு அகற்றுதலுடன் தொடர்புடைய பணியாளர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், நிரந்தர நியமனம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகளை நடத்திவிட்டு, அவர்களது நியமனம் தொடர்பான அரச நிர்வாகப் நடைமுறைகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான நிலையில், வெளிவாரிப் பணியாளர்களையே தாம் அதிகளவில் சுத்திகரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

வெளிவாரிப் பணியாளர்களை, விடுமுறைகள் ரீதியாக கட்டுப்படுத்துவதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்த அவர், எது எவ்வாறிருந்தபோதும், தற்போதைய அவசர சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சுத்திகரிப்புடன் தொடர்புடைய சகலரினதும் விடுமுறைகளையும் இரத்துச் செய்துள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .