2025 ஜூலை 19, சனிக்கிழமை

பதுங்கு குழிகளும் வெடிபொருட்களும் அகற்றப்படவில்லை

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலிகாமம் வடக்கில் கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினரின் பதுங்கு குழிகளும் வெடிபொருட்களும் காணப்படுவதால் தமது காணிகளுக்கு செல்வதற்கு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இராணுவத்தினர் இங்கிருந்து வெளியேறிச் சென்றபோது, தாங்கள் அமைத்த பதுங்கு குழிகளை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் சில இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி அபாயம் காணப்படுவதாக அடையாளப்படுத்திவிட்டும் சென்றுள்ளனர்.

இதனால் தங்கள் காணிகளை துப்பரவு செய்வதற்கு அச்சப்படும் அப்பகுதி மக்கள், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X