Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பழை பகுதியில் பனை மரத்தில் ஓலை வெட்டியவர் குளவி கொட்டுக்குள்ளாகி மரத்திலிருந்து கீழே விழுந்து திங்கட்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகேஸ்வரன் (வயது 37) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
பனை மரத்தில் ஓலைகளை வெட்டியபோது, ஓலையில் இருந்த கருங்குளவி கலைந்து இவரைக் கொட்டியுள்ளது. இதனால், அவர் பனை மரத்திலிருந்து கீழே வீழ்ந்து படுகாயமடைந்தார்.
உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
45 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
7 hours ago