2025 ஜூலை 19, சனிக்கிழமை

பருத்தித்துறை சாலையின் கருமபீடம் திறப்பு

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

இலங்கைப் பேர்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலையில் கருமபீடம் நெல்லியடி மத்திய பஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பொது முகாமையாளர் உபாலி கிரிபத்துடுவ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பயணி ஒருவர் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

கொழும்பு, திருகோணமலை, மன்னார் மட்டக்களப்பு உள்ளிட்ட தூர இடங்களுக்கு பிரயாணத்தை மேற்கொள்பவர்கள் தங்கள் ஆசனங்களை இந்தக் கருமபீடத்தில் முற்பதிவு செய்து கொள்ளமுடியும்.

மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கான பருவகாலச் சீட்டையும் நேரக்கண்காணிப்பாளர் சேவையையும் இந்தக் கரும பீடத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என பருத்தித்துறை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார்.

இத்திறப்பு விழா நிகழ்வில், வடபிராந்திய செயலாற்று முகாமையாளர் கே.கேதீசன், நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X