Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை நீதவான் பெருமாள் சிவகுமாருக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு, நேற்று புதன்கிழமை (26) பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் வைத்து, 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இளவாலை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தவணை முறையில் இடம்பெற்று வருகின்றது. மேற்படி வழக்கில் அப்பகுதியினை சேர்ந்த பிரதேசவாசி ஒருவர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த வழக்கு விசாரணைகளின் போது, கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரின் வாக்குமூலத்தின் பிரகாரம், இரு தரப்பு விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், தகவல் தந்தவரை கைது செய்து மன்றில் முற்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பொலிஸார் கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டிருந்தனர். தகவல் தருபவரை மன்றில் முற்படுத்தினால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொலிஸார் நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்படிநபரை தேடிச் சென்ற நிலையில், தகவல் கொடுத்த நபர், கொழும்புக்கு சென்று, நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் முறைப்பாடு ஒன்றைப் புதன்கிழமை (26) பதிவு செய்துள்ளார்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago