2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய கட்டடம் திறந்துவைப்பு

George   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன், ற.றஜீவன்
 
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் 176 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையம், சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவினால், சனிக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டது.
 
1985ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் பொலிஸ் நிலைய கட்டடம் அழிவடைந்த பின்னர் பொலிஸ் நிலையம் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது.
 
தற்போது சகல வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கட்டடம் 5 எஸ் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில், சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏசுமந்திரன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பொலிஸ் மா அதிபர் எம்.இலங்ககோன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, மற்றும் அமைச்சின் செயலர்கள், முப்படைகளின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திலிருந்து விருந்தினர்கள் கண்டிய நடனத்துடன் அழைத்து வரப்பட்டு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. தொடர்ந்து நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைத்த அமைச்சர், பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
 
பொலிஸ் நிலையம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸார் தங்குமிட விடுதி, ஆவண காப்பகம் போன்ற வசதிகளை உள்ளடக்கி இக்கட்டட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .