2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பருத்தித்துறை பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

முறைப்பாடு தொடர்பில் முறையாக விசாரணை செய்யாமல், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு அணுசரணையாகச் செயற்பட்டதாக புலோலி தெற்கைச் சேர்ந்த ஒருவர், பருத்தித்துறை பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை(09) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த நபரின் ஒரு  இலட்சம் ரூபாய் பெறுமதியான கறவை பசுமாடு ஒன்று காணாமல்போயுள்ளது. அந்தப் பசுமாட்டை பல இடங்களில் தேடியபோது, நபர் ஒருவரின் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, மிருக வைத்தியரால் உறுதிப்படுத்தப்பட்ட இலக்கமும் பசுமாட்டில் பொருத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பசுமாட்;டின் உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார், பசுமாட்டை உரியவரிடம் வழங்குமாறு கூறியுள்ளனர். ஆனால், கட்டி வைத்தவர், பசுமாட்டை ஒப்படைக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காமல், இணக்க சபைக்குச் செல்லுமாறு கட்டளையிட்டுள்ளனர்.

தனது மாடு என அடையாளப்படுத்தியும் அதனைப் பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் இது தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X