Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 05 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை நாவலடிப் பகுதியிலுள்ள வீடொன்றில் 45 கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை, நேற்று திங்கட்கிழமை (04) இரவு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், குருநகர் - சவக்காட்டு சந்திப்பகுதியில் மேற்படி நபர் கஞ்சா பரிமாறுவதாக விசேட குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
சம்பவ இடத்துக்குச் சிவில் உடையில் சென்ற பொலிஸார், தப்பியோட முயன்ற சந்தேகநபரைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருந்தனர்.
அத்துடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பருத்தித்துறையிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை மறைத்து விற்பனை செய்வதாக தெரியவந்தது.
சந்தேகநபரை, பருத்தித்துறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 45 கிலோகிராம் எடையுள்ள கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை, யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .