2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு மேலதிக பஸ் சேவை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறையில் இருந்து கொழும்பிற்கு பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மேலதிக விசேட பஸ் சேவை ஒன்றினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி, இன்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

வழமையாக பருத்தித்துறையில் இருந்து கொழும்பிற்கு இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் பயணிகளின் நலன் கருதி மேலதிக பஸ் ஒன்றினை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆசனங்களைப் பருத்தித்துறைச்சாலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X