2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறையிலிருந்து திருமலைக்கு மேலதிக பஸ் சேவைகள்

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்து திருகோணமலைக்கு நாளை திங்கட்கிழமை முதல் மேலதிகமாக இரு பஸ் சேவைகள் நடத்தவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார்.
 
இதற்கிணங்க, காலை 7.45 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு புறப்படும் பஸ், மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி புறப்படும்.
 
இதேவேளை மாலை 3 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு புறப்படும் பஸ், மறுநாள் காலை 8 மணிக்கு அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி புறப்படும்.

பருத்தித்துறையிலிருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும்  பஸ், மதியம் 12 மணிக்கு திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை நோக்கி புறப்படும்.

இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 சேவைகள் பருத்தித்துறை-திருகோணமலைக்கு இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X