2025 மே 15, வியாழக்கிழமை

பரிசளிப்பு விழா

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்., வயாவிளான் றோ.க. த. க பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா, நீண்ட காலத்தின் பின்னர் நேற்று (27) முற்பகல் 09.30 மணி முதல் வயாவிளான் மத்திய கல்லூரியில் எளிமையாக நடைபெற்றது.

வயாவிளான் றோ.க.த.க பாடசாலையின் அதிபர் ந.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி. பிரகாஷ் பிரதம விருந்தினராகவும் அச்சுவேலி பங்குத் தந்தை அருட்பணி சி.ஜெயக்குமார் அடிகளார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

யாழ்., வயாவிளான் மத்திய கல்லூரியின் ஆசிரியரான பிரம்மஸ்ரீ நி. பவானந்தசர்மா ஆசியுரை நிகழ்த்தினார். விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து பாட ரீதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பரிசில் தினத்தை முன்னிட்டு, மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .