Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 26 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத், எம்.றொசாந்த்
கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றுகூடுவதோ, மக்களை ஒன்றுதிரட்டி எவ்வித நிகழ்வுகளையும் நடத்துவதோ முடியாது என பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடைக் கட்டளை வழங்கியது.
மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித்தனியாக விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றால் இன்று (26) நண்பகல் மேற்படி வழங்கப்பட்டது.
இதேவேளை, ஒரே நாட்டினுள் ஒற்றுமையாக வாழவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். எனவே, தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் , நீங்கள் ஆளுபவர்கள் - தமிழர்கள் அடிமைகள் எனும் மனநிலையில் இருந்து மாறுங்கள் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றின் நியாயாதிக்கத்துக்குள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டமையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவீரர் நினைவேந்தலுக்குதட தடை கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொலிஸார் குறிப்பிட்டனர்.
“அதனை மன்று உணர்ந்து கொண்டு, கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, தனது நியாயாதிக்க எல்லைக்குள் பொதுக் கூட்டங்களை நடத்த தடை விதித்தது. அதேவேளை, நினைவேந்தல் தொடர்பில் எதனையும் மன்று குறிப்பிடவில்லை.
“எந்த அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமையைத் தடுக்க முடியாது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களிடம் சொல்ல விரும்புவது, தமிழர்களின் உரிமைகளைத் தடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. எனவே, நாங்கள் நினைவேந்தல் செய்வதற்கு இடையூறு விளைவிக்காது இருக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago