2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பற்றைக்காணி உரிமையாளர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட, பயன்பாடற்று பற்றைகளாக காணப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் செயற்திட்டத்தை பருத்தித்துறை பிரதேச சபை முன்னெடுத்து வருகின்றது.

பயன்பாடற்று இருக்கும் காணிகளில் வளரும் பற்றைகள் மற்றும் குப்பைகளால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. இதனால், இவ்வாறு பற்றைகளாகக் காணப்படும் காணிகளை பிரதேச சபை கையகப்படுத்தி, அதனை துப்பரவு செய்கின்றது.

தொடர்ந்து, காணி உரிமையாளர்கள் பிரதேச சபைக்கு அழைக்கப்பட்டு, பற்றைகளாக காணிகளை வைத்திருந்த குற்றத்துக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது.

இவ் அபராதம் துப்பரவு செய்த கூலியுடன் சேர்த்த தொகையாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X