Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 மார்ச் 15 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பற்பசைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் நேற்று (14) உத்தரவிட்டார்.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை பார்வையிட செவ்வாய்க்கிழமை (13) சென்றுள்ளார்.
அவர் கொண்டு சென்ற பொதியை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிட்டபோது, பொதியில் இருந்த பற்பசைக்குள் மறைத்து ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அதனை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (14) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதனை அடுத்து அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
8 minute ago
39 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
39 minute ago
39 minute ago
52 minute ago