2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக வளாகத்துக்குள் வாள்களுடன் நுழைந்து அச்சுறுத்தல்

George   / 2017 மார்ச் 02 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்குள் வாள்களுடன், மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர்,  கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களை புதன்கிழமை மாலை அச்சுறுத்தியுள்ளனர்.

கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, மாணவர்களில் ஒருவர், குறித்த குழுவினரை அழைத்து வந்து ஏனைய மாணவர்களை அச்சுறுத்தியுள்ளதாக​தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பல்கலைக்கழக வாசலில் வைத்து,  மாணவர்களுக்கு கூரிய வாள் போன்ற ஆயுதங்களை காட்டியும், “எமக்கு ஆவா குழுவைத் தெரியும்” என கூறியும் அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அங்கு அதிகமான பல்கலைகழக மாணவர்கள் ஒன்றுசேரவே, குறித்த கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளதாக, சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாக மாணவர்களால் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X