Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி பூநகரி பல்லவராயன்கட்டுச் சந்தியிலிருந்து கிராஞ்சி வேரவில் வரையான பதினைந்து கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, கிளிநொச்சி மாவட்டச் செயலரிடம் மேற்படி கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
பல்லவராயன்கட்டுச் சந்தியிலிருந்து கிராஞ்சி வேரவில் வரையான பதினைந்து கிலோமீற்றர் வரையான வீதி, மிக மோசமாக காணப்படுவதாகவும் இதனால் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அத்துடன், தற்போது இடம்பெற்று வருகின்ற பஸ் சேவை போதாது என்றும் மேலும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago