2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை ஒன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (09) பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாவற்காட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த சங்கத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றோல் குண்டினை வீசியுள்ளனர்.

அதனால் அச்சமடைந்த காவலாளி அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சங்கம் மூடப்பட்டு இருந்தமையால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .