2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பளையில் பொலிஸார் மீது துப்பாக்கிசூடு: இளைஞன் கைது

George   / 2017 ஜூன் 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் இளைஞன், குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நேற்று இரவு  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த கிருபானந்தமூர்த்தி விஜயரூபன் (வயது 29) என்ற இளைஞனே, அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி அதிகாலை, பளைப்பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகத்தில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டதுடன் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஆயுதத்தின் ஒரு பகுதியை கைப்பற்றியிருந்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற குற்றப்புலனாய்வு பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X