2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பழைய கடதாசிகளில் வாழ்வாதாரம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 30 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

பழைய கடதாசிகளைக் கொண்டு கைவினைப் பொருட்களை தயாரித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் நவாலி நட்சத்திரப் பெண்கள் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வர்த்தகக் கண்காட்சி யாழ்.மாநகர சபை மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

இந்தக் கண்காட்சிக்குச் சென்ற போது, நவாலி நட்சத்திரப் பெண்கள் குழுவின் காட்சியறையொன்று இருந்தது.

அங்கு சென்று பார்த்தபோது, அங்கு கடதாசிகளால் செய்யப்பட்ட பல கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தாங்கள் பழைய கடதாசி;களை சேகரித்து அவற்றை ஊற வைத்து, தெய்வங்களில் உருவங்கள் மற்றும் இதர உருவங்களை உருவாக்கி அதற்கு சாயம் பூசி விற்பனை செய்யும் தொழிலை முன்னெடுத்து வருவதாக அவர்கள் கூறினர்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று, இதற்கான பயிற்சியை வழங்கியுள்ளது. அந்தப் பயிற்சியைக் கொண்டு, நவாலியிலுள்ள பெண்ணொருவர் தலைமைத்துவப் பெண்ணாக, 10 பெண்களை இணைத்து இந்த கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியை ஆரம்பித்துள்ளார்.

தாங்கள் வைத்திருக்கும் உற்பத்திகளையும் விட கேட்கப்படும் உருவங்களும் செய்து வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறினர். 

கண்காட்சிக்குச் செல்பவர்கள் அந்தக் கூடத்தையும் ஒருமுறை பார்வையிட்டு அங்கு ஒரு பொருளை வாங்கி அந்தப் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X