2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பழைய பாலத்தடி பிரதான வீதி புனரமைப்பு

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் பழைய பாலத்தடி பிரதான வீதி பல வருடங்களாக செப்பனிடப்படாத நிலையில் உள்ளமையினால் கடற்தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் போக்குவரத்துக்களை துரிதப்படுத்தும் வகையில், தலைமன்னார் பழைய பாலத்தடியில் உள்ள கடற்படையினர், பொது மக்களின் உதவியுடன் குறித்த வீதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) காலை முதல் செப்பனிடும் பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது தென் பருவகால மீன்பிடி இடம்பெற்று வருகின்றது.

மீனவர்கள் மாற்றுப்பாதையூடாகவே கடலுக்குச் சென்று வருகின்றனர்.

இதனால், மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வந்தனர்.

தற்போது குறித்த வீதி போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் செப்பனிடப்பட்டுள்ளது.குறித்த வீதியூடாக மீனவர்கள் தாமதம் இன்றி கடலுக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X