2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பஸ் நிலையம், பொது மலசலகூடத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கை

Gavitha   / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் பஸ் நிலையம் மற்றும் பொது மலசலகூடம் என்பவற்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏ-9 வீதி மாங்குளம்; சந்திப்பகுதியானது, வடமாகாணத்தின் முக்கிய இடமாகக் காணப்படுவதுடன் முல்லைத்;தீவு மன்னார், ஆகிய பகுதிகளை இணைக்கின்ற பிரதான சந்தியாகவும் தினமும் 4,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற இடமாகவும் காணப்படுகின்றது.

குறிப்பாக மன்னார், வெள்ளாங்குளம் தொடக்கம் மாங்குளம் வரைக்குமான வீதியிலுள்ள வெள்ளாங்குளம், கல்விளான், துணுக்காய், மல்லாவி, ஒட்டறுத்தகுளம், வன்னிவிளாங்குளம், உள்ளிட்ட கிராம மக்களும் இதேபோன்று மாங்குளம் தொடக்கம் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வரையான வீதியில் அமைந்துள்ள கிராம மக்களும்; இந்த மாங்குளம் சந்திக்குச் சென்றே ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்,  அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்துகின்ற இந்த மாங்குளம் சந்திப்பகுதியில், ஒரு பஸ் நிலையமோ அல்லது பொது மலசலகூடவசதியோ இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனால் பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பஸ் நிலையம் இன்மையால் மக்கள் வீதியில் தரித்து நின்று பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அத்துடன் பொது மலசலகூட இன்மையால், இங்கு வருகின்ற பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .