2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸில் கைவரிசை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன.

எதேச்சியாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த போது நகை, பணம் கைபேசி என்பன திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பஸ் சுன்னாகம் பஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது.

பொலிஸார் வரவழைக்கப்பட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் சோதனையிடப்பட்டதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் பொருட்களை திருடி தனது மர்ம உறுப்பில் மறைத்து வைத்துள்ளமை தெரியவந்தது.

பின்னர் குறித்த பெண்ணுடன் வந்த தாய் மற்றும் தகப்பனை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் இவர்கள் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X