Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
க. அகரன் / 2019 மார்ச் 14 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்துகொண்டிருந்த தாயையும் பிள்ளையையும் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (13) மாலை புதிய பஸ் நிலையப்பக்கமாக இருந்து ஒன்றரை வயது மகனை தூக்கியவாறு தாயொருவர் பாதசாரி கடவையை கடக்க முயற்சித்துள்ளார். இவ்வாறு கடந்தவர் மீது வைத்தியசாலைப்பக்கமாக இருந்து வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டதுடன் பட்டா வாகனம் பிள்ளைக்கு மேலாக ஏறிச் சென்றுள்ளது.
இதன்போது அப்பகுதியில் நின்றவர்களால் இருவரும்மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிமுடிகின்றது.
இந் நிலையில் குறித்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
52 minute ago