2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘பிக்குகள் ஆட்சியாளர்களின் முகவர்கள்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கை ஆட்சியாளர்களதும் ஆட்சிக்கு வர நினைக்கின்றவர்களதும் முகவர்களாகச் செயற்படுகின்ற ஞானசார தேரர் போன்ற பிக்குகள், தமிழர்களை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறார்களெனத் தெரிவித்த டெலோ அமைப்பின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமா சபா குகதாஸ், சிங்கள - பௌத்த மேலாதிக்கச் சிந்தனைகளை தமிழர் தாயகப் பகுதிகளில் அனுமதிக்காது, தமிழர் தேசத்தைப் பாதுகாப்போமெனவும் கூறினார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சில பௌத்த பீடங்களின் தேரர்களும் தமிழர்களை மிரட்டும் வகையில் கருத்துகளைக் கூறியுள்ளதாகவும் இதன் பின்னணியில், ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் உள்ளதாகவும் கூறினார்.

ஐனநாயகம் பேசும் ஆட்சியாளர், வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் நீதி, ஐனநாயகம் போன்றவற்றை ஒரு பொருட்டாக மதிப்பதில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், தங்களின் அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களை கிள்ளுக்கீரையாக பாவிக்கலாமென எண்ணுவதாகவும் கூறினார்.

அதற்காக நேரடியாக இனவாதத்தை கையில் எடுக்காது, தமது முகவர்களாக சில பிக்குகளைப் பயன்படுத்துகின்றனரெனவும், அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X