2025 மே 14, புதன்கிழமை

‘பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு யாழ்.மாநகர சபையே காரணம்’

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாநகர சபையால்  மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை, மாநகரசபை நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தாமையால் தான் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாது  காணப்படுவதாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன், இன்று (12) தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாநகரசபையில், மக்களுக்குச் சாதகமான தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளனவெனவும் எனினும், மாநகரசபை நிர்வாகமானது, அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டுவதில்லையெனவும் சாடினார்.

இதனால், மக்களின் பிரச்சினைகளுக்கு இன்றுவரை தீர்வு காண முடியாது உள்ள​தாகவும், அவர் கூறினார்.

கடந்த ஆறு மாத காலங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்படாத விடுதிகள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு பதிவு செய்யத்  தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், தீர்மானமொன்றை நிறைவேற்றி இருந்ததாகவும், அவர் ஞாபகமூட்டினார்.

எனினும், அந்தத் தீர்மானத்தையும் செயற்படுத்த தவறியதன் விளைவாகவே, செவ்வாய்க்கிழமை (11), விபசார விடுதி​யொன்றை சுற்றிவளைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காதெனவும், வரதராஜா பார்த்திபன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .