2025 ஜூலை 16, புதன்கிழமை

’பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் எதிர்காலம் இல்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

“தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்நாட்டுக்கு ஓர் எதிர்காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே, இவை விரைவில் முடிவுக்கு வரவேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான  இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த தின நிகழ்வும், நூல் வெளியீடும் யாழ். பொது நாலகத்தில் நேற்று  (03) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் நாங்கள் போட்டியிடவில்லை. 1988ஆம் ஆண்டு நாங்கள் பகிரங்கமாக கூறினோம், அரசமைப்பின் 13ஆவது திருத்தம் ஒரு முன்னேற்றகரமானது. அதில் மாகாணசபைகள் உருவாக்கப்படுகின்றன. முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அதிகாரப் பகிர்வு என்பன காணப்படுகின்றன. அந்த வகையில், அது முன்னேற்றகரமானது. ஆனாலும், அது எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியாத காரணத்தால், தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை நிராகரித்தது.

“எமது பிரச்சினையை, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னராக தீர்த்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் உறுதியாக இருந்த காரணத்தாலும், தமிழ் மக்கள் சார்பில் ஓர் அரசியல் கட்சி உறுதியாக இருந்து செயற்பட்டதன் காரணத்தாலும் அப்பாதையில் எமது மக்களும் ஒற்றுமையாக இருந்து பயணித்தன் காரணமாகவும் இவ்வளவு தூரம் எமது இலக்கை நோக்கி நியாயமான ஒரு பயணத்தை நாம் செய்துள்ளோம்.

“எமது மக்களுடைய இறைமையின் அடிப்படையில், மக்களுடைய உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்து பிரதேசங்களில், எமக்கு போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று. நாங்கள் வலியுறித்திவருகின்றோம்.

“மேலும், இலங்கையில் ஏற்படுத்தப்படும் அரசியல் தீர்மானங்கள் இராணுவத்தினருடைய கை ஓங்குவதனால் ஏற்படக்கூடாது என்றும் அது அரசியல் ரீதியாகவே ஏற்படவேண்டும் என்பதையே நாம் இந்தியாவுக்கு தெளிவாக கூறிவருகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .