2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’பிரபுக்கள் ஆட்சியை நடாத்தும் ராஜபக்சக்கள்’

Freelancer   / 2022 மே 02 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பிரபுக்கள் ஆட்சியை நடாத்தும் ராஜபக்ஷக்களின் ஆட்சியை அடியோடு நீக்கி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ராஜபக்சக்கள் தமது சகபாடிகளுக்குப் படிப்படியாக முழு நாட்டையும் விற்பனை செய்துவரும் நிலையில், இலங்கையில் வாழும் மக்கள் எங்கு செல்வது என ரில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்களும் தமது தலைமைகளை நம்பி வாக்களித்து  ஏமாற்றப்பட்ட நிலையில் அரசியல் ஆதரவற்றவர்களாக நிற்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X