2025 மே 10, சனிக்கிழமை

’பிரிந்து நிற்காது ஓரணியில் திரளவும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைணய வேண்டுமெனத் தெரிவித்த டெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், இனியும் வீடு, மீன், சைக்கில் எனப் பிரிந்து நிற்காது ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயமெனவும் கூறினார்.

“இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் ஒன்றிணையாவிட்டால்” தந்தை செல்வா சொன்னது போன்ற நிலைமையே ஏற்படும்” என்றும், அவர் எச்சரித்துள்ளார்.

டெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு, கௌரவிப்பு நிகழ்வு, யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில், நேற்று (06) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அலையொன்று தென்னிலங்கையில் கிளப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்  அதன் தொடர்ச்சியாக தமிழர்களை வந்தேறு குடிகள் என்றும் வாடகை வீட்டுக்காரர்கள் என்றும் சிலர் இனவாத ரீதியான கருத்துகளை தெரிவித்து வருகின்றனரெனவும் சாடினார்.

“சிங்கள தேசத்தில், தமிழர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒற்றுமையாக எதிர்ப்பதை போன்று, தமிழர் தேசத்தில் அந்த ஒற்றுமை இல்லை. தமிழர் தரப்புக்களிடத்தே அந்த ஒற்றுமை என்பது காணல் நீராகவே உள்ளது. ஆக தமிழ் தேசம் எங்கே போகின்றது என்ற கேள்வி எழுகின்றது” எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X