2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிறந்து மூன்றே நாட்களான சிசு உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 10 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் பிறந்து மூன்றே நாட்களான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

பண்டத்தரிப்பை சேர்ந்த றொபேர்ட் சாள்ஸ் நகுலா என்பவர் கடந்த 5ஆம் திகதி பெண் சிசுவினை பிரசவித்தார். தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்ததை அடுத்து 6ஆம் திகதி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அந்நிலையில் கடந்த 8ஆம் திகதி இரவு 10 மணியளவில் குழந்தையின் உடலில் மாற்றங்களை அவதானித்த தாய், குழந்தையை தூக்கிய போதும் மாற்றத்தை உணர்ந்துள்ளார். எனவே உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பயனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு குழந்தையின் உடலில் நீர் சத்து குறைவானமையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .