2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்

Princiya Dixci   / 2022 மார்ச் 31 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால்  தங்களது கைகளை  தாங்களே வெட்டிக்கொண்டுள்ளார்கள் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு  முன்  தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.

பின்னர் குருதியை கடதாசி மூலம் துடைத்துவிட்டு, கிருமிதொற்று நீக்கி (sanitizer)  காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த  சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவரை ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள்  ஒருவித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் வைத்தியர்கள், மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரிரு மாணவர்கள் செய்வதனை பார்த்து ஏனைய மாணவர்களும் இவ்வாறு செய்து கொண்டதாகவும், கட்டிளம் பருவத்தில் மாணவர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்படுவதாகவும் தெரிவித்துள்ள உளநல மருத்துவர் ம.ஜெயராசா, இவ்வாறு கைகளில் வெட்டுக்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மாணவர்கள் அல்ல எனுவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, கைகளை  வெட்டிக்கொள்ளும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைள் நிறைவுற்று வேலை வாய்ப்புக்கள் முக்கியமாக பொலிஸ், நீதித்துறை மற்றும் இராணுவம் உள்ளிட்ட பல தொழில்துறைகளுக்கு நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X