2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

Editorial   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடமாகாண கல்வி மற்றும் பெண்கள் விவகார அமைச்சுகளுக்கான புதிய அமைச்சர்கள்இ இன்றுக் காலை பதவியேற்றுள்ளனர்.

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

இதற்கமைவாக, வடமாகாண கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் விவசாய, கால்நடை அமைச்சராக  தொடர்ந்து கடமையாற்றவுள்ளார்.

இவர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே முன்பாக பதவியேற்றுள்ளனர்.

மாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஆழுங்கட்சி உறுப்பினர்களே கூறிய முறைகேட்டு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை குழு ஒன்றை நியமித்திருந்தார். மேற்படி விசாரணை குழு, மாகாண கல்வி அமைச்சர் மற்றும்மாகாண விவசாய அமைச்சர் ஆகியோரை பதவி நீக்கும்படி பரிந்துரைத்தமைக்கமைய முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும், மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
இராஜினாமா செய்திருந்த அமைச்சர்களின் அமைச்சு துறைகளை முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனை மாகாண கல்வி அமைச்சராகவும், மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனை மாகாண பெண்கள் விவகார அமைச்சராகவும் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X