Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
“புதிய அரசியலமைப்பு தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு சபையில் பேசிய பேச்சின் அடிப்படையில், புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப்போகின்றது” என முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வரைபு தொடர்பாக என்னால் அறிக்கை வெளியிடப்பட்டது.
அப் புதிய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சமஸ்டிக்கு முரணாக அமைந்துள்ளது. முழுமையாக தமிழ் அபிலாஷைகளை தீர்க்காது எனவும் சில திருத்தங்களுடன் தற்காலிக ஏற்பாடாக இதனை ஏற்கலாம் எனவும் கூறினேன்.
ஆனால் அப்புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு சபையில் ரணில் உரையாற்றும் போது, குறித்த இப் புதிய அரசியலமைப்பானது தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரிவு 2 மற்றும் 9 ஆகிய சரத்துக்களை பாதுகாத்தே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்தகைய ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் அடிப்படையில் பார்க்கும் போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பானது ஓற்றையாட்சியாகவே அமையும் என்பது தெரிகின்றது. எனவேதான் புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தான் வரப்போகின்றது என்பதையே கூறினேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025