2025 மே 14, புதன்கிழமை

‘புதிய கூட்டணி கூட்டமைப்பின் ‘பி’ அணி’

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “பி“ அணி என்றுத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லையென்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து​ரைத்த அவர், இன்றைக்கு, வடக்கு. கிழக்கில். இரண்டாம் பெரும் கட்சியாக தாங்கள் இருப்பதாகவும் தங்களுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்காக, கொள்கை ரீதியாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு, ஒரு சிலர் செயற்படுவதாகவும் சாடினார்.

இவர்கள், வரவிருக்கும் தேர்தலில், தங்களுக்கு வரக் கூடிய அங்கிகாரத்தை ஏதோவொரு வகையில் குழப்புவதற்கு முயற்சிக்கிறார்களெனவத் தெரிவித்த கஜேந்திரகுமார், எது எவ்வாறாயினும், இந்தக் கூட்டணியால் நிச்சயமாக தங்களது வாக்கு வங்கியை சரிக்க முடியாதெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .