2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதிய தலைவர் நியமனம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு நியமன அடிப்படையில் புதிய தலைவரும் இரண்டு மேலதிக இயக்குநர்களும் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பதவியில் பொதுச் சபையால் தெரிவு செய்யப்பட்ட இயக்குநர் சபை, தலைவர் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு குறைபாடுகள், தொடர்ச்சியாக மூன்று முறைக்கு மேல் கோரம் இல்லாது இயக்குநர் சபையை கூட்டாமை மற்றும் முறைகேடுகள், தொடர்ச்சியான நட்டம் போன்ற காரணங்களாலேயே, பொதுச் சபையால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர் க.சுதர்சன் தலைவராகவும்  வடமராட்சி கிழக்கு கடற்றொழொலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர்  தம்பிஐயா பாலசிங்கம், கிழவி தோட்டம் - கரவெட்டியை சேர்நத வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பணியாளர்  மாணிக்க வாசகம் சுபாஸ்கரன் ஆகியோர் மேலதிக இயக்கநர்களாகவும் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் புதிய தலைவர், மேலதிக இயக்குநர் இருவருக்கும் யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரால் அனுப்பிய கடிதத்தில் கூட்டுறவு சட்டத்தில், தனக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தியே இந்த நியமனங்களை வழங்கியுள்ளதாக, மாவட்டக் கூட்டுறவு உதவி ஆணையாளர் பரீன் ஹஸ்ஸான அப்துல் கம்ஹூ நியமன இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .