2025 மே 08, வியாழக்கிழமை

’புதியவர்களை நிறுத்தினால் ஆதரிப்போம்’

Niroshini   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராக இமானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால், அவரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
 

அத்துடன், நல்லூர் பிரதேச சபைக்கு, தியாகமூர்த்தி தவிர்ந்த புதிய வேட்பாளர் ஒருவரை நியமித்தால் அவரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில், நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இரண்டு சபைகளிலும் பதவி விலகிய ஆர்னோல்ட், தியாகமூர்த்தி இருவரையும் வேட்பாளர்களாக நிறுத்தினால் அவர்களை எதிர்ப்போமென்றார்.

அதேநேரம், தமது எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும், அவர்கள் சமர்ப்பிக்கும் வரவு - செலவுத் திட்டத்தையும் எதிர்ப்போமெனவும், அவர் கூறினார்.

இதன்மூலம், இரண்டு சபைகளும் கலையும் நிலைமை ஏற்பட்டால், அதற்கான முழு பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X