2025 மே 19, திங்கட்கிழமை

புதைகுழி வளாகம் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெறுகின்றன

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் புதைகுழி வளாகம் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இன்று திங்கட்கிழமை (7) 225 ஆவது நாளாக வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெறுகின்றன.

கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் அடையாளப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தப்படும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்றன.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் சதோச வளாகத்துக்கு அருகாமையில் உள்ள கடை தொகுதிக்கு செல்லும் ஒரு பகுதி மூடப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

விரிவுபடுத்தப்படும் பகுதிகளிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது வரை 282 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 277 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X