2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புரெவிச் சூறாவளி தாக்கம்; 72 ஆயிரத்து 410 பேர் பாதிப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புரெவி சூறாவளியின் தாக்கத்தையடுத்து,அசாதாரண காலநிலை காரணமாக, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 21 ஆயிரத்து 884 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களில் சிக்கி இதுவரை, இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் மாத்திரம் தற்போது  42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 111 குடும்பங்களைச் சேர்ந்த 3,841 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,66 வீடுகள் முழுமையாகவும் 2886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X