2025 மே 15, வியாழக்கிழமை

‘புளொட்டின் ஊடாக கூட்டமைப்பில் இணைவதாகக் கூறப்படுவது வதந்தி’

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், புளொட் அமைப்பினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடப் போவதாக சொல்லப்படுவது வதந்தியாகுமென, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படும் மாற்று அணியில் இணைந்து கொள்ளாமல் புளொட் அமைப்பினூடாக கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடப்போதாக வெளியாகிய செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், அக்கட்சியின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கஜதீபன் ஆகியோருடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மற்றப்படி புளொட்டுக்கு ஊடாக கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக் கேட்டு சித்தார்த்தனுடன் தான் பேசவில்லையெனவும், ஐங்கரநேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .