Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள், ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரது வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வருவதாகவும், அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளமையை அடுத்து வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற பொலிஸார் சென்று, அங்குள்ள பொருள்களை அகற்றும் போது அலுமாரி ஒன்றுக்குள் ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2 396 ரவைகள், கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.
அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டு, . அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் மேலும் கூறினர்.
22 minute ago
45 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
45 minute ago
3 hours ago
5 hours ago