Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாது ஒழிக்கக் கோரி வல்லமை சமூக மற்றத்திற்கான இயக்கத்தினர் நடைபவனி ஒன்றினை மேற்கொண்டனர்.
யாழ்.திருநெல்வேலி சந்தை பகுதியில் இன்று (14) ஒன்று கூடியவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்க கோரிய பதாகைகளை கைகளில் ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அதனை தொடர்ந்து நடைபவனியாக அங்கிருந்து பலாலி வீதியூடாக பரமேஸ்வர சந்தி வரை சென்று, அங்கிருந்து இராமநாதன் வீதியூடாக யாழ்.பல்கலைகழக வாயிலை அடைந்தனர்.
பல்கலைகழக வாயிலிலும் சில நிமிடங்கள் போராடத்தினை நடாத்தி போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .