2025 மே 05, திங்கட்கிழமை

பெண்ணை வெட்டிய கொள்ளையர்கள்

Niroshini   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த்

 

வீடொன்றுக்குள் கொள்ளையிடும் நோக்குடன் உட்புகுந்த கொள்ளையர்கள், தமது திட்டம் நிறைவேறாத நிலையில், அங்கிருந்த பெண் ஒருவரை, வாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற சம்பவம் ஒன்று, சாவகச்சேரி – தாசன் தோப்பு பகுதியில், இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

முகங்களை துணிகளால் மறைத்துவாறு கைகளில் கூரிய ஆயுதங்களுடன் அக்கொள்ளை கும்பல் வந்ததாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் அபாய குரல் எழுப்பியதை அடுத்தே, கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில், காயத்துக்குள்ளான பெண், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X