2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பொன்னாலையில் காட்டுத்தீ

Editorial   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

 

பொன்னாலை தொடக்கம் திருவடிநிலை வரையான காடு, நேற்று தீப்பற்றி எரிந்த நிலையில், யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொதுமக்களுடன் இணைந்து கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், அப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவான காடு தீயினால் எரிந்து நாசமானது.

வலி. மேற்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் வலி. மேற்கு மற்றும் காரைநகர் பிரதேச சபைகள், காரைநகர் பிரதேச செயலகம், பிரதேச மக்கள் ஆகியவர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காடு தீப்பற்றி எரிவதைக் கண்ட உத்தியோகத்தர்கள் சிலர், அது தொடர்பாக வலி.மேற்கு பிரதேச செயலாளருக்கு வழங்கிய தகவலையடுத்து, கடற்படையினர் மற்றும் சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தொழிலாளர்களும் முழுவீச்சில் தீயணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இதேவேளை, யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் அங்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும் தீ பரந்து எரிந்தமையால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வலி.மேற்கு பிரதேச சபை, காரைநகர் பிரதேச சபை மற்றும் காரைநகர் பிரதேச செயலகத்தின் உதவியும் கோரப்பட்டது.

நூற்றுக்கணக்கானோரின் தீவிர முயற்சியின் பயனாக பிற்பகல் 3.00 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X