2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொருத்தமற்ற தலைப்பு : வாரப் பத்திரிகையை எரித்து எதிர்ப்பு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 07 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினுடைய தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வாரப் பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரித்து “இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர்” என தலைப்புடன் தொடர்புடைய செய்தி, இந்தியாவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான சங்கர் என்பவரது கதையாகும்.

குறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு, மற்றும் படம் என்பன பொருத்தமற்றது எனவும், வேண்டும் என்றே இடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தே, பருத்தித்துறை பகுதிகளில் பத்திரிகையின் பிரதியை தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் நோக்குடன் இச் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X