Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 16 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ் நிலையம் செல்லாததால் , வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை பொலிஸார் , அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதன் போது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு , பொலிஸர்ரை தாக்கியும் உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , அச்சுவேலியில் இருந்து மேலதிக பொலிஸார் அங்கு விரைந்து , பருத்தித்துறை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago