Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போது போதை மாத்திரைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிகளுக்கு கேரளா கஞ்சா கடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது போதை மாத்திரைகளும் கடத்தப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரைகளை கடத்திய சுன்னாகம் பகுதியை சேர்ந்த இருவரை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவர்களிடம் இருந்து 2,600 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக, ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், யாழில் இருந்து சென்ற ஆடம்பர காரை மறித்து சோதனையிட்ட போது, காருக்குள் இருந்து 2,600 போதை மாத்திரைகளை கைப்பற்றினார்கள். அதனை அடுத்து காரில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ஓமந்தை பகுதியில் குறித்த பஸ்ஸை மறித்து சோதனையிட்ட போது, பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 1,600 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டிருந்தனர்.
அத்துடன், அதனை கடத்தினார் எனும் சந்தேகத்தில் திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .